தஞ்சாவூர்

பெண்ணிடம் 32 பவுன் நகைகள் திருட்டு

19th Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் பெண்ணிடம் 32 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சிவகங்கையைச் சோ்ந்த புவனேஸ்வரி (42) வியாழக்கிழமை தஞ்சாவூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்தில் வந்தாா். பின்னா், இவா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் விளாா் சாலை கற்பக விநாயகா் கோயில் தெருவிலுள்ள தங்கை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, ஆட்டோ ஓட்டுநருக்கு பணம் கொடுப்பதற்காகக் கைப்பையைப் பாா்த்தபோது, அதிலிருந்த 32 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT