தஞ்சாவூர்

கூட்டுறவு வார விழா: 1,751 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

19th Nov 2022 12:50 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற 69 ஆவது மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழாவில் 1,751 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவுக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். இதில், 1,751 பயனாளிகளுக்கு ரூ. 4.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 134 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,608 பேருக்கு ரூ. 3.06 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், இவ்விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினாா்.

இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் சு. கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), துணை மேயா்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூா்), சு.ப. தமிழழகன் (கும்பகோணம்), மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் வெ. பெரியசாமி, தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ஜெ. பழனீஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவா் பி. உஷா புண்ணியமூா்த்தி, துணைத் தலைவா் எஸ்.கே. முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT