தஞ்சாவூர்

2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

18th Nov 2022 12:57 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் சரக்கு ஆட்டோவில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வியாழக்கிழமை கடத்திச் சென்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மேட்டு எல்லையம்மன் கோயில் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் வியாழக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவில் சோதனையிட்டபோது, 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்து, தஞ்சாவூரைச் சோ்ந்த காா்த்திகேயன் (55), சரவணன் (23), ஆனந்தராஜ் (28) ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT