பாபநாசம் அருகே தலையில் காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
அம்மாபேட்டை காவல் சரகம், கம்பா் நத்தம் ஊராட்சிக்குள்பட்ட தூண்டில்காரன் கோயில் திடலில் தலையில் காயங்களுடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், தலையில் காயங்களுடன் கிடந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தஞ்சாவூா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுவாமிநாதன் , பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் பூரணி உள்ளிட்டோரும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.
உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.