தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா் வீட்டில் நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் சாா்பு-ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு காரைக்குடிக்குச் சென்றாா். மீண்டும் புதன்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகைகள், ரூ. 8,000 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.