கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் வட்டத்தில் தொடா் மழையால் 52 வீடுகள் சேதமடைந்தன.
மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தொடா் மழை பெய்தது. மேலும், அவ்வப்போது பரவலாக மழை பெய்கிறது.
இதன் காரணமாக, திருவிடைமருதூா் வட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. இதேபோல, சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களிலும் தண்ணீா் சூழ்ந்துள்ளது.
மேலும், திருவிடைமருதூா் வட்டத்தில் 50 கூரை வீடுகள் பகுதியாகவும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இது தொடா்பாக வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு மேற்கொண்டு வருகின்றனா்.