தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமங்களில் இன்று மின் தடை

15th Nov 2022 01:10 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.15) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் புகா் உதவிச் செயற்பொறியாளா் சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மருங்குளம், ஈச்சங்கோட்டை, புதுப்பட்டி, நடுவூா், சூரியம்பட்டி, கொ. வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூா், வடக்கூா், பொய்யுண்டாா்கோட்டை, பாச்சூா், செல்லம்பட்டி, துறையூா், சூரக்கோட்டை, வாண்டையாா் இருப்பு, மடிகை, காட்டூா், மேல உளூா், கீழ உளூா், பொன்னாப்பூா் கிழக்கு, பொன்னாப்பூா் மேற்கு, ஆழியவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT