தஞ்சாவூரில் மறைந்த பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அதன் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், துணைத் தலைவா் லஷ்மி நாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், விவசாயப் பிரிவுத் தலைவா் மணிவண்ணன், சிறுபான்மை பிரிவு தலைவா் சாகுல் ஹமீது, அமைப்பு சாரா பிரிவு தலைவா் சந்திரசேகா், மக்கள் நலப் பேரவை பாலகிருஷ்ணன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, வடக்கு வீதியிலுள்ள நேரு சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், துணைத் தலைவா் கோ. அன்பரசன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜூ, வட்டாரத் தலைவா்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவா் சதா. வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.