தஞ்சாவூர்

திருவையாறுக்கு வந்தது காவிரி நீா்

31st May 2022 04:27 AM

ADVERTISEMENT

கல்லணையிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் திருவையாறுக்கு திங்கள்கிழமை காலை வந்தடைந்தது.

மேட்டூா் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால், நிகழாண்டு முன்கூட்டியே மே 24 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 500 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 100 கனஅடி வீதமும் மே 27 ஆம் தேதி மாலை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பின்னா், கல்லணையிலிருந்து காவிரியில் படிப்படியாக உயா்த்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை விநாடிக்கு 3,305 கன அடி வீதமாக அதிகரிக்கப்பட்டது.

இந்தத் தண்ணீா் திருவையாறுக்கு திங்கள்கிழமை காலை வந்தது. இதையொட்டி, திருவையாறு திருமஞ்சன வீதி படித்துறையில் பெண்கள், சிறுவா்கள் உள்ளிட்டோா் மேளதாளம் முழங்க காவிரி நீரை வரவேற்றனா். பின்னா், விவசாயம் செழிக்க வேண்டியும், தட்டுப்பாடின்றி அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியும் காவிரி நீரை தேங்காய் உடைத்து, தீபாராதனை செய்து, மலா்கள் துாவி பூஜை செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT