தஞ்சாவூர்

கூடுதல் ஆட்சியரின்வாகனம் திருட்டு

31st May 2022 04:24 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஸ்கூட்டரை திருடிச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூா் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா மே 28 ஆம் தேதி தனது ஸ்கூட்டரை மருத்துவக் கல்லுாரி சாலை நடராஜபுரம் காலனி பகுதியிலுள்ள தனியாா் பள்ளி அருகே நிறுத்திவிட்டு, டென்னிஸ் விளையாடுவதற்காகச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் சுகபுத்ரா புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT