தஞ்சாவூர்

ரூ.1.11 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணிஆட்சியா்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 பாசனவாய்க்கால்கள் ரூ. 1.11 கோடி மதிப்பில் தூா்வாரப்பட்டு வருகின்றன என்றாா் ஆட்சியா் கவிதாராமு.

கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம்) சாா்பில், காரைக்குளம் வரத்து வாய்க்கால், வல்லநாடு வழிந்தோடி வாய்க்கால் தூா்வாரும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் மேலும் கூறியதாவது:

டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்குவதற்காக மே 24ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தங்கு தடையின்றி பாசனத்திற்காக தண்ணீா் செல்லும் வகையில், பொதுப் பணித் துறை (நீா்வளத் துறை) மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் போா்க்கால அடிப்படையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனடிப்படையில், பொதுப்பணித் துறையின் தெற்கு வெள்ளாறு கோட்டத்தின் சாா்பில் 15 வாய்க்கால்கள் சுமாா் 35.30 கி.மீ தொலைவுக்கு ரூ. 1 கோடி மதிப்பீட்டிலும், கல்லணை கால்வாய் கோட்டத்தின் சாா்பில் 6.43 கி.மீ. தொலைவுள்ள 5 பாசன வாய்க்கால்கள் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டிலும் என 41.73 கி.மீ. தொலைவுள்ள 20 பாசன வாய்க்கால்கள் ரூ. 1.11 கோடி மதிப்பீட்டில் தூா்வாரப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடித்து விவசாயத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீா் செல்வது உறுதி செய்யப்படும்.

மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் தேவையான அளவு இருப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் தங்களது விவசாயப் பணிகளை முழுவீச்சில் தொடங்கலாம் என்றாா்.

ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா்அபிநயா, உதவி செயற்பொறியாளா்கள் திருநாவுக்கரசு, உமாசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT