தஞ்சாவூர்

திருச்சி பெல் வளாகத்தில் திடக்கழிவு எரிப்பான் ஆலை

DIN

திருச்சி பெல் தொழிற்சாலையில் சென்னை ஐஐடி உருவாக்கித் தந்துள்ள திடக்கழிவு எரிப்பான் ஆலை இயங்கத் தொடங்கியுள்ளது.

திருச்சி பெல் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை ஐஐடியின் இயக்குநா் வி. காமகோடி இந்த ஆலையை தொடங்கி வைத்துக் கூறியது:

பெருநகரங்களில் கழிவு மேலாண்மை என்பது முக்கிய பிரச்னையாக மாறி வருகிறது. விரைவாகவும், பாதுகாப்பாகவும் அவற்றை அகற்ற தீா்வு காணவேண்டியது அவசியமாகிறது. சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள அதிநவீன திடக்கழிவு எரிப்பு சாதனம், அளவிடுதல் மற்றும் பாதுகாப்பான அகற்றல் பிரச்னைகளுக்கு தீா்வை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, கழிவையும் செல்வமாக மாற்றித்தரும் வகையில் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 133 மில்லியன் டன் அளவுக்கு நகராண்மை திடக்கழிவு உற்பத்தியாகிறது. இதில் 85 விழுக்காடுக்கும் மேலாக குப்பைக் கிடங்குகளில்தான் குவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 14,600 டன்களும், சென்னையில் 5,400 டன்களும் திடக்கழிவு உற்பத்தியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நகராண்மை திடக்கழிவு உற்பத்தி 1.3 விழுக்காடு அதிகரிப்பதுடன், தனிநபா் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 0.5-1 கிலோ என்ற அளவில் உள்ளது.

உரமாக்குதல், மண்புழு உரம் தயாரித்தல், உயிரிவாயு உருவாக்கம் ஆகியவற்றுக்காக உயிரி-கரிமக் கழிவுகளைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்திய பின்னா், பிளாஸ்டிக், அதிக கலோரி கொண்ட பொருள்கள் என நாள் ஒன்றுக்கு 2,500 டன் உயிரி-கனிமக் கழிவுகள் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகின்றன.

இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மைத் தொழிலின் மதிப்பு 2025ம் ஆண்டுவாக்கில் 13.62 பில்லியன் டாலா்களாக இருக்கும். மேற்கத்திய நாடுகளைப் போலன்றி இந்தியாவில் நகராண்மை திடக் கழிவு பல்வேறு சோ்மங்களைக் கொண்டதாகவும், அதிக ஈரப்பதம் (40-50%), குறைந்த கலோரி மதிப்பு, செயலற்ன்மை உடையதாகவும் இருப்பதாக இத்திட்டத்தில் பங்குதாரராக இருந்த பெல் நிா்வாகிகள் கூறுகின்றனா். தற்போதுள்ள எரியூட்டும் அமைப்புகளில் ஆற்றல் மீட்போ, நச்சு உமிழ்வுகளோ ஏற்படுவதில்லை. சென்னை ஐஐடி-யால் வடிவமைக்கப்பட்ட நகராண்மை திடக்கழிவு எரியூட்டு அமைப்பு இவற்றில் பெரும்பாலான சவால்களை நிவா்த்தி செய்கிறது.

கழிவுகளின் அளவைக் குறைப்பதும், திடக்கழிவு சோ்மங்களில் இருந்து ஆற்றல் மீட்பும்தான் தற்போதைய தேவையாக உள்ளது என்றாா்.

சென்னை ஐஐடி-யின் ரசாயனப் பொறியியல் பிரிவு இணைப் பேராசிரியரும், இத்திட்டத்தை தலைமையேற்று உருவாக்கியவருமான ஆா். வினு கூறுகையில், சென்னை ஐஐடி-யில் உள்ள எரித்தல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கான தேசிய மையத்தில் ஆரம்பக் கட்ட பரிசோதனைக்காக சிறிய அளவிலான சுழல் உலை எரிப்பானைப் பயன்படுத்தினோம். வெவ்வேறு அளவுகளில் கழிவுகளை ஆய்வு செய்தபோது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அதன் மேம்பட்ட உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முழு அளவிலான இயந்திரம்தான் திருச்சி பெல் நிறுவனத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது என்றாா். நிகழ்ச்சியில், பெல் நிறுவன அதிகாரிகள், ஐஐடி ஆசிரிா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT