தஞ்சாவூர்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்.எல்) லிபரேஷன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகரச் செயலா்கள் எம். வடிவேலன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ரா. பிரபாகா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), க. தமிழ்முதல்வன் (வி.சி.க), எஸ்.எம். ராஜேந்திரன் (சிபிஐ எம்-எல் லிபரேஷன்) ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்டச் செயலா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு முத்து. உத்திராபதி, விடுதலைச் சிறுத்தைகள் மைய மாவட்டம் ச. சொக்கா ரவி, சிபிஐ (எம்-எல்) லிபரேஷன் டி. கண்ணையன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT