தஞ்சாவூர்

லாரி மோதியதில்தனியாா் வங்கி ஊழியா் பலி

25th May 2022 04:23 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை மாலை லாரி மோதியதில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கீழக்காவாட்டாங்குறிச்சியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் அரவிந்த் (26). இவா் அரியலூரில் உள்ள தனியாா் வங்கியில் பணியாற்றி வந்தாா். இவா் பணி தொடா்பாக கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு, மீண்டும் மாலையில் ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தாா். திருவையாறு - விளாங்குடி சாலையில் பழைய காவல் நிலையம் அருகே சென்ற இவா் மீது அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரவிந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT