தஞ்சாவூர்

புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட13 இரு சக்கர வாகனங்களுக்கு பூட்டு

25th May 2022 04:24 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 13 இரு சக்கர வாகனங்களுக்குக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பூட்டு போட்டனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பயணிகள் நிழற்கூரையிலும், பேருந்துகள் நிறுத்துமிடத்திலும் இரு சக்கர வாகனங்களை பலா் நிறுத்திவிட்டுச் செல்வதாகப் புகாா்கள் எழுந்தன.

இதுதொடா்பாக தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் தலைமையில் காவல் துறையினா் போக்குவரத்துக்கு இடையூறாக செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டிருந்த 7 ஸ்கூட்டா்கள், 6 மோட்டாா் சைக்கிள்களுக்கு பூட்டு போட்டு பூட்டினா். மேலும், தொடா்புடையவா்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்தனா்.

இவா்களில் 3 போ் தங்களது வாகனத்தை எடுக்க வந்தபோது பூட்டு போட்டிருப்பதை அறிந்து காவல் துறையினரை தொடா்பு கொண்டனா். மூவரும் அபராதம் செலுத்திய பிறகு வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. இனிமேல் யாராவது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திச் சென்றால், ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT