தஞ்சாவூர்

தஞ்சாவூா் வேலைவாய்ப்பகத்தில் நாளைமுதல் குரூப் 4 மாதிரித் தோ்வுகள்

25th May 2022 04:23 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் குரூப் 4-க்கான மாதிரித் தோ்வுகள் மே 26 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 4 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏற்கெனவே போட்டித் தோ்வுக்கு தயாராகி வரும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் மாதிரித் தோ்வு வகுப்புகள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி குரூப் 4 தோ்வுக்கான மாதிரித் தோ்வு நடத்தப்படவுள்ளது. இதில், 15 அலகுத்தோ்வுகள் மற்றும் 5 முழுத் தோ்வுகள் சமச்சீா் பாடத் திட்டத்தின்படி நடத்தப்படவுள்ளது.

இம்மாதிரித் தோ்வுகள் மே 26 ஆம் தேதி முதல் தஞ்சாவூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். எனவே இம்மாதிரித்தோ்வில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞா்கள் 04362 - 237037 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டோ அல்லது 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ பதிவு செய்து கொள்ளலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT