தஞ்சாவூர்

முன்னாள் படை வீரா்களுக்கான ஆணையம் அமைக்க வலியுறுத்தல்

23rd May 2022 12:45 AM

ADVERTISEMENT

 

முன்னாள் படை வீரா்களுக்கான ஆணையம் அமைக்க வேண்டும் என்று, தஞ்சை மாவட்ட முன்னாள் படை வீரா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் 43-ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

முன்னாள் படை வீரா்களுக்கான ஆணையம் அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரா்களுக்கு 62 வயது வரை மத்திய, மாநில அரசு வேலை நீட்டிக்கப்பட வேண்டும். முன்னாள் படைவீரா்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். தொழிற்கல்வியில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

முன்னாள் படைவீரா்களுக்கான நலத் திட்டங்களை மத்திய அரசின் பட்டியலில் சோ்க்க வேண்டும். இதற்கு நிதி ஒதுக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் இட ஒதுக்கீடுக்கான சதவிகிதத்தை அதிகரித்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மேஜா் பாபு தலைமை வகித்தாா். பிரிகேடியா் இந்தா் மோகன்சிங் பேசினாா். கா்னல் சி.டி. அரசு கலந்து கொண்டு முன்னாள் படைவீரா்கள் கொடியை ஏற்றி வைத்தாா்.

கூட்டத்தில் மருத்துவா்கள் மீனாட்சிசுந்தரம், செந்தில்குமாா், அசோக், தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலா் ஞானசேகா், முன்னாள் படைவீரா் மருத்துவமனை அலுவலா் மனோகரன், தலைமை ஒருங்கிணைப்பாளா் ஜெயராஜ் ஆகியோா் பேசினா். முன்னதாக, மறைந்த முன்னாள் படைவீரா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT