தஞ்சாவூர்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: இனிப்பு வழங்கிய பாஜகவினா்

23rd May 2022 12:42 AM

ADVERTISEMENT

 

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்ததை வரவேற்று, தஞ்சாவூரில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சனிக்கிழமை குறைத்தது. இதன் மூலம், தஞ்சாவூா் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.22 குறைந்து ரூ. 103.36-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6.71 குறைந்து ரூ. 94.88-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதை வரவேற்று தஞ்சாவூா் கீழ் பாலம் அருகிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்வுக்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் ஆா். முரளிதரன், மாவட்டச் செயலா்கள் ஆசைக்கனி, சாய்லட்சுமி, அம்ரிதாசன், பவித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT