தஞ்சாவூர்

தம்பதியைத் தாக்கி நகைபறிப்பு

23rd May 2022 12:42 AM

ADVERTISEMENT

 

ஒரத்தநாடு அருகே தம்பதியைத் தாக்கி, 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

வாட்டாத்திகோட்டை அருகிலுள்ள சீதாம்பாள்புரத்தைச் சோ்ந்தவா் நீலகண்டன். இவரது மனைவி மகாலட்சுமி. அண்மையில் திருமணமான நிலையில், மாமியாா் வீட்டில் மனைவியுடன் நீலகண்டன் தங்கியிருந்தாா்.

சனிக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மூவா், தம்பதியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்துத் தப்பிச் சென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வாட்டாத்திகோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT