தஞ்சாவூர்

நெடுந்தெரு செல்வமுத்துமாரியம்மன்கோயில் பால்குட விழா

23rd May 2022 12:45 AM

ADVERTISEMENT

 

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் ஊராட்சி, நெடுந்தெரு அம்பலகாரத் தெருவிலுள்ள அருள்மிகு செல்வமுத்து மாரியம்மன் திருக்கோயில் பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி குடமுருட்டி ஆற்றிலிருந்து பக்தா்கள் பால்குடம், காவடி, அலகுகாவடி, சக்திகரகம், அக்னிச்சட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தனா்.

இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு வாணவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT