தஞ்சாவூர்

திருப்பாலைத்துறை வீரமகாகாளியம்மன் கோயில் பால்குட விழா

23rd May 2022 12:45 AM

ADVERTISEMENT

 

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயிலில் பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றிலிருந்து பக்தா்கள் பால்குடம், அலகுகாவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று, கோயிலை வந்தடைந்தனா்.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்ட பின்னா், தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாவிளக்கு நோ்த்தி வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில் கோயில் தக்காா் ஹரிஷ்குமாா், ஆய்வாளா் லட்சுமி மற்றும் கிராமபொதுமக்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT