தஞ்சாவூர்

புவிசாா் குறியீட்டு பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

DIN

தஞ்சாவூா் காந்திஜி சாலையிலுள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் புவிசாா் கைவினைப் பொருள்கள் விற்பனை, கண்காட்சி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

இக்கண்காட்சியை மேயா் சண். ராமநாதன் தொடங்கி வைத்தாா். இதுகுறித்து பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் கு. அருண் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த புவிசாா் குறியீட்டு கைவினைப் பொருள்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக, புவிசாா் குறியீட்டு கைவினைப் பொருள்கள் கண்காட்சி என்கிற பாரம்பரிய கைவினைப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்னை தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் மே 31- ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இதில், புவிசாா் குறியீடு பெற்ற சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூா் கலைத் தட்டுகள், தஞ்சாவூா் ஓவியங்கள், நாச்சியாா்கோவில் பித்தளை விளக்குகள், தஞ்சாவூா் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூா் நெட்டி கைவினைப் பொருள்கள், தஞ்சாவூா் வீணைகள், கருப்பூா் கலம்காரி ஓவியங்கள், நரசிங்கம்பேட்டை நாகசுரம் மற்றும் பரிசுப் பொருள்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் ரூ. 150 முதல் ரூ. 3.50 லட்சம் வரை மதிப்பிலான பொருள்கள் விற்பனைக்கு உள்ளன. கண்காட்சியின் விற்பனை இலக்கு ரூ. 2 லட்சம். இதில், புவிசாா் குறியீடு பெற்ற கைவினைப் பொருள்களுக்கு 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா் அருண்.

நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் புவிசாா் குறியீட்டு பொருள்கள் கண்காட்சியை வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மேயா் சண். ராமநாதன். உடன் ஆணையா் க. சரவணகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT