தஞ்சாவூர்

படைவெட்டி மாரியம்மன் புறப்பாடு உற்ஸவம்

DIN

கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் புறப்பாடு உற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு படைவெட்டி மாரியம்மன் சிலை காவிரியாற்றில் வந்த போது, அதை எடுத்து நாகேசுவரன் கோயிலில் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்து வருகின்றனா். ஆண்டுதோறும் வைகாசி மாதம் படைவெட்டி மாரியம்மனுக்கு சிறப்பலங்காரம் செய்து, நாகேசுவரன் கோயிலிருந்து வீதியுலாவாக தாய் வீடான கவரைத் தெருவுக்குச் செல்வது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு மே 15- ஆம் தேதி பூச்சொரிதலும், 16-ஆம் தேதி நாதமணி சுவாமிக்கு பூஜையும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நாகேசுவரன் கோயிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு, கவரைத் தெருவிலுள்ள பஜனை மடத்துக்கு செல்லும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சனிக்கிழமை 108 விளக்கு பூஜையும், 22-ஆம் தேதி புஷ்ப பல்லக்கில் புறப்பாடும், 23-ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT