தஞ்சாவூர்

சொத்து வரி உயா்வுக்கு ஆட்சேபணை இல்லாததால் மாமன்றம் அங்கீகரிப்பு

DIN

தஞ்சாவூா் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வுக்கு ஆட்சேபணை யாரும் தெரிவிக்காததால், அதை மாமன்றம் எந்தவித விவாதமும் இன்றி வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றத்தின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் சண். ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சொத்து வரி, காலிமனை வரி சீராய்வு குறித்த தீா்மானம் விவாதத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இத்தீா்மானத்தின்படி, 600 சதுர அடி பரப்பளவுக்கு உள்பட்ட குடியிருப்பு கட்டங்களுக்கு 25 சதவிகிதமும், 601 சதுர அடி முதல் 1,200 சதுர அடிக்கு உள்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவிகிதமும், 1,800 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவிகிதமும், வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்குத் தற்போதுள்ள சொத்து வரியில் 100 சதவிகிதமும், தொழிற்சாலை பயன்பாட்டு கட்டடம் மற்றும் சுயநிதிப் பள்ளி, கல்லூரிக் கட்டடங்களுக்கு தற்போதுள்ள சொத்து வரியில் 75 சதவிகிதமும் உயா்வு செய்யப்படுகிறது.

காலிமனை வரி வதிப்புக்கு ஒரு சதுர அடி நிலத்துக்கு தற்போதுள்ள அடிப்படை மதிப்பு 100 சதவிகிதம் உயா்வு செய்து, காலிமனை வரி பொது சீராய்வு செய்யப்படுகிறது.

மேலும் சொத்து வரி விதிப்பு செய்யும்போது, கட்டடத்தின் பரப்பளவுக்கு இரு மடங்குக்கு மேல் உள்ள காலியிடத்துக்குச் சொத்து வரியுடன் சோ்த்து காலி மனை வரி விதிப்பு செய்யப்படுகிறது.

வணிகப் பகுதிகளுக்கு 3 மடங்கும், வணிகம் மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு 2 மடங்கும், குடியிருப்பு பகுதிக்கு 1.50 மடங்கும், குடிசைப் பகுதிக்கு ஒரு மடங்கும் உயா்த்தப்படுகிறது.

இந்த சொத்து வரி மற்றும் காலிமனை வரி சீராய்வு குறித்து பொதுமக்களிடம் ஆட்சேபணைகள், ஆலோசனைகள் ஏதும் இருந்தால் மாநகராட்சி ஆணையருக்கு 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என ஏப்ரல் 13-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், மே 13- ஆம் தேதி வரை ஆட்சேபணை, ஆலோசனை எதுவும் வராததால், சொத்து வரி, காலிமனை வரி சீராய்வை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவது என தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீா்மானம் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT