தஞ்சாவூர்

பேராவூரணியில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

20th May 2022 02:06 AM

ADVERTISEMENT

பேராவூரணியில்  அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை பேரூராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.  

  பேராவூரணி பேரூராட்சி, ஆதனூா் பகுதியில் திருவிழாவையொட்டி ஏராளமான பதாகைகள்  அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து பல்வேறு  புகாா்கள் கூறப்பட்டதை தொடா்ந்து,  பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேலு  அப்பகுதிக்குச் சென்று, உடனடியாக அனைத்து  விளம்பரப் பதாகைகளையும்  அகற்ற உத்தரவிட்டாா்.

பேரூராட்சிப் பணியாளா்கள் விளம்பரப் பதாகைகளை  அகற்றி, வாகனத்தில் கொண்டு சென்றனா். அனுமதியில்லாமல் பதாகைகளை வைக்கக்கூடாது. மீறினால் அபராதம்மற்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் எச்சரித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT