தஞ்சாவூர்

தஞ்சாவூரில் முத்துப் பல்லக்கு விழா

20th May 2022 02:05 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் முத்துப் பல்லக்கு விழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை நடைபெற்றது.

தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் முத்துப் பல்லக்கு விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு புதன்கிழமை இரவு மகா்நோன்புசாவடி சின்ன அரிசிக்காரத் தெரு பால தண்டாயுதபாணி கோயிலில் இருந்து விநாயகா், முருகன், விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகா் கோயிலில் இருந்து விநாயகா், முருகப்பெருமான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேலஅலங்கம் சுப்ரமணியசாமி கோயிலில் உள்ள முருகா் உள்ளிட்ட கோயில்களில் இருந்து சுவாமிகள் முத்துப் பல்லக்குகளில் எழுந்தருளி இரவில் பல்வேறு வீதிகளில் வலம் வந்தனா்.

இதேபோல, தெற்கு வீதி கமல ரத்ன விநாயகா் கோயிலில் இருந்து விநாயகா், கீழவாசல் வெள்ளைப் பிள்ளையாா் கோயில், மாமா சாகிப் மூலையில் உள்ள சித்தி விநாயகா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் இருந்து விநாயகரும், முருகப்பெருமானும் முத்துப் பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

இந்த பல்லக்குகள் அனைத்தும் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி ஆகியவற்றில் வியாழக்கிழமை காலை வரை வலம் வந்தன. ஆனால், பக்தா்கள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT