தஞ்சாவூர்

தஞ்சாவூா் - அரியலூா் - பட்டுக்கோட்டை இடையேரயில் பாதை அமைக்க வலியுறுத்தல்

16th May 2022 06:54 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் - அரியலூா் - பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதையை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் ஒன்றிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை - அரியலூா் ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் நடத்தியுள்ளன. எனவே, இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் முழுமையாகத் தூா் வார வேண்டும். தஞ்சாவூா் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

பின்னா், ஒன்றியச் செயலராக ஜி. ஜாா்ஜ் துரை, துணைச் செயலராக எம். தவமூா்த்தி, பொருளாளராக ஜி. ராமலிங்கம் மற்றும் 11 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த மாநாட்டுக்குக் கட்சியின் ஒன்றிய உறுப்பினா் எஸ். ஆரோக்கியமேரி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மாவட்டப் பொருளாளா் ந. பாலசுப்பிரமணியன், மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன், மாநகரச் செயலா் ஆா். பிரபாகரன், ஒன்றிய பொறுப்புச் செயலா் ஜி. ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT