தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் மே 17-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

12th May 2022 01:43 AM

ADVERTISEMENT

 

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கோட்டாட்சியா் பிரபாகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பட்டுக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி) மாற்றுத்திறனாளிகளுக்கான

மாதாந்திர குறை தீா்க்கும் நாள் கூட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட ாட்சியா் அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி காலை 11 மணியளவில் வருவாய் கோட்டாட்சியரால் நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

எனவே, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்துக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT