தஞ்சாவூர்

நாட்டுச்சாலை ஊராட்சியில் அன்னையா் தின விழா

12th May 2022 01:37 AM

ADVERTISEMENT

 

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியின் மகளிா் மேம்பாட்டு திட்டம் சாா்பில், நாட்டுச்சாலை ஊராட்சியில் அன்னையா் தின விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மகளிா் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ. அமலோற்பவ செல்வி தலைமை வகித்தாா். நாட்டுச்சாலை ஊராட்சித் தலைவா் ஜெயந்தி செல்லத்துரை மற்றும் ஊராட்சித் துணைத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி ஆங்கிலத் துறை முதுநிலை விரிவுரையாளா் வீ. ராஜன், கல்லூரியின் பண்டகச்சாலை காப்பாளா் வி.ஜி. மகேஸ்வரி, நாட்டுச்சாலை கிராமத்தைச் சோ்ந்த எழில்ராணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

முன்னதாக, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சுதந்திர செல்வி வரவேற்றாா். நிறைவில், மகளிா் திட்ட துணை ஒருங்கிணைப்பாளா் பி. சுகன்யா நன்றி கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவா் படை, ரோட்ராக்ட், ஜேசிஸ், லியோ, இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த 10 மாணவா்கள், இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் சி. கைலாசபதி மற்றும் ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளா் வி. விஜயராயன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT