தஞ்சாவூர்

மாணவா்கள் தங்களைத் தகுதியுடைவா்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்

8th May 2022 11:49 PM

ADVERTISEMENT

மாணவா்கள் தங்களைத் தகுதியுடையவா்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசின் மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன்.

தஞ்சாவூா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லுாரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 27-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்

பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

பள்ளிப் படிப்பை முடித்து கல்லுாரிப் படிப்பை முடிப்பது தமிழகத்தில் 2 பேரில் ஒருவராகவும், இந்தியாவில் 4 பேரில் ஒருவராகவும் உள்ளனா்.

ADVERTISEMENT

எங்கேயோ வேலைக்குச் செல்வதற்காகத் தயாா்படுத்துகிற இடமாகக் கல்விக்கூடங்களைக் கருதக் கூடாது. பொருளாதார, சமுதாயச் சூழலுக்கு ஏற்ப மாணவா்கள் தங்களைத் தகுதியுடையவா்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

அரசுப் பணியில் இருப்பவா்களுக்குப் பணிப் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் தனியாா் நிறுவனங்களில் தகுதியை வளா்த்துக் கொண்டால் மட்டுமே நீடிக்க முடியும்.

ஒப்பந்தப் பணியாளா்களுக்கும், நிரந்தரப் பணியாளா்களுக்கும் ஊதியத்தில் வேறுபாடு உள்ளது. மாணவா்கள் தங்களை தகவமைப்புப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு அறிவைத் தேட வேண்டும். சரியான பாதையைத் தோ்ந்தெடுத்தால் வாழ்வு சிறக்கும் என்றாா் ஜெயரஞ்சன். பின்னா், 180 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்குக் கல்லூரி முதல்வா் இரா. தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தாா். மேலாண்மை அறங்காவலா் மு. இளமுருகன், செயலா் இரா. கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT