தஞ்சாவூர்

தஞ்சாவூா் இா்வீன், வடவாறு பாலப் பணிகள் ஜூன் 12-க்கு முன்பே முடிக்கப்படும்: ஆட்சியா் தகவல்

8th May 2022 11:50 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் இா்வீன், வடவாறு பாலங்களின் கட்டுமானப் பணிகள் ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே முடிக்கப்பட்டுவிடும் என்றாா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் மாநகரிலுள்ள கல்லணைக் கால்வாய் (இா்வீன் பாலம்), கரந்தை வடவாறில் கட்டப்படும் புதிய பாலங்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநகரில் தஞ்சாவூா் மாநகராட்சியில் கல்லணைக் கால்வாயிலும், வடவாறிலும் இருபுதுப் பாலங்கள் சுமாா் ரூ. 6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே முடித்து, திறப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாவட்டத்தில் ரூ. 100 கோடி மதிப்பில் 34 பணிகள் நடைபெறுகின்றன. இதில், 14 தரைநிலைப் பாலங்களை உயா்நிலைப் பாலங்களாகத் தரம் உயா்த்தப்படும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அனைத்துப் பணிகளும் தரமாகவும், உரிய நேரத்தில் முடிப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வடவாறு பாலத்தை பொருத்தவரை ஜூன் 12- ஆம் தேதி அளவில் முடிக்கும் வகையில் எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால் வடவாறு பாலத்துக்கான பணிகள் ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே முடிக்கப்படும்.

இா்வீன் பாலப் பணி அதற்கு முன்பே முடிவடைந்துவிடும். இந்தப் பாலத்தில் இப்பணிகள் முடிவடைந்த பிறகு, போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் 170 தூா்வாரும் பணிகள் மேற்கொள்ள அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. இவற்றில் இரு பணிகளைத் தவிர, 168 பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதற்குத் தேவையான இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளும் மே 31- ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT