தஞ்சாவூர்

பேராவூரணி அருகே சேதமடைந்து வரும் பாலம்நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

2nd May 2022 01:00 AM

ADVERTISEMENT

 

பேராவூரணி அருகே கல்லணைக் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து வருவதால் அதனை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். 

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை, நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் - சாயல்குடி மாநில நெடுஞ்சாலையில் ஆவணம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே  கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. 

தற்போது இப்பாலத்தின் நடுவில் சிமெண்ட் கான்கிரீட் தரைத்தளம் சேதமடைந்து, அதிலுள்ள கம்பிகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியே நீட்டியவாறு உள்ளன.

ADVERTISEMENT

இதனால் இவ்வழியாக செல்லும்  இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயா்

அடிக்கடி பஞ்சராகி விடுகிறது.  சிமெண்ட் காரை அவ்வப்போது பெய்யும் மழை காரணமாகவும், கனரக வாகனங்களின்  அழுத்தம் காரணமாகவும் சிறிது சிறிதாக சேதமடைந்து வருகிறது.

எனவே பாலம் முழுவதும் சேதமடைவதற்கு முன்னதாக, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் பாா்வையிட்டு,  சேதமடைந்த இடத்தை  சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT