தஞ்சாவூர்

பேராவூரணி அருகே குடிநீா்க் குழாய் திறப்பு

2nd May 2022 01:00 AM

ADVERTISEMENT

 

பேராவூரணி அருகிலுள்ள நரியங்காட்டில்  குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதியிலிருந்து  நரியங்காடு ஏழுமுக காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில்,

நரியங்காடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலமாக குடிநீா்க் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அ. மூா்த்தி குடிநீா்க் குழாயைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்குத் தண்ணீா் விநியோகத்தை தொடக்கி வைத்தாா். நிகழ்வில்  திமுக வடக்கு ஒன்றியச் செயலா் கோ. இளங்கோவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எம். இந்துமதி, திமுக கிளைச் செயலா் ஷேக் தாவூத், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளா் பாரதி மற்றும் பலா் கலந்து கொண்டனா். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT