தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மே தினக் கொண்டாட்டம்

2nd May 2022 12:58 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மே தினக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி சாா்பில் தஞ்சாவூா் கீழ வீதியிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தலைவா் வெ. சேவையா தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, பொருளாளா் என். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், கீழவாசல், ஜெபமாலைபுரம், கரந்தை உள்ளிட்ட இடங்களில் இவ்விழா நடைபெற்றது.

மருத்துவக்கல்லூரிச் சாலை, வல்லம் உள்பட 30 இடங்களில் ஐஎன்டியுசி சாா்பில் மே தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் கொடியேற்றினாா். துணைத் தலைவா் கோ. அன்பரசன், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கணபதி நகரிலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாநகரச் செயலா் வடிவேலன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், துணைச் செயலா் த. முருகேசன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினாா். கும்பகோணம் ஒன்றியச் செயலா் ஏ. ராதாகிருஷ்ணன் தலைமையில் சுந்தரபெருமாள்கோவில், திருவலஞ்சுழி, மணப்படை யூா், பட்டீஸ்வரம், கொற்கை, ஏனாநல்லூா், சாத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருவிடைமருதூா் ஒன்றியச் செயலா் ஏ.எம். ராமலிங்கம் தலைமையில் திருபுவனம், வாணாபுரம், திருநீலக்குடி கூத்தங்குடி, மேலையூா், மல்லபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT