தஞ்சாவூர்

முகம் சிதைந்த நிலையில் இளைஞா் மா்ம சாவு

29th Mar 2022 03:37 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை அருகேயுள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி முருகானந்தம் (32). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாய் விஜயாவுடன் வசித்து வந்தாா். கடந்த இரண்டு நாள்களாக முருகானந்தம் வீட்டுக்கு வராததால், விஜயா பல இடங்களில் தேடினாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை நடுவிக்கோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் துா்நாற்றம் வீசிய நிலையில் சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் வாட்டாத்திக்கோட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதன்பேரில், அங்கு வந்த போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

இதில், முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது முருகானந்தம் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT