தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில், எச்.ஐ.வி. குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் பா. சிந்தியாசெல்வி தலைமை வகித்தாா். தொடா்ந்து அவா் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினாா்.
தஞ்சாவூா் கல்லுக்குளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநா் இரா. சரசுவதி சிறப்புரையாற்றினாா். நம்பிக்கை மைய விழிப்புணா்வுப் பேச்சாளா் அ. சித்ரா பேசினாா். செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா் முனைவா் இரா. தமிழடியான் அறிமுகவுரையாற்றினாா்.
முன்னதாக, மாணவி ந. சரசுவதி மீனா வரவேற்றாா். நிறைவாக, மாணவி மணீஷா நன்றி கூறினாா். மாணவி ராபிகா நிகழ்வைத் தொகுத்து வழங்கினாா்.