தஞ்சாவூர்

பாபநாசம் அருகே மாணவா்கள் மறியல்

25th Mar 2022 03:53 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், தியாக சமுத்திரம் ஊராட்சியில் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை பள்ளி, கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் எந்த ஒரு பேருந்தும் ஊரில் நிற்காததை கண்டித்து மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கபிஸ்தலம் போலீஸாா், பேருந்துகள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

உடனடியாக அங்கு நின்றிருந்த பேருந்தில் அனைத்து மாணவ, மாணவிகளையும் போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீஸாரும் ஏற்றி கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT