தஞ்சாவூர்

உறுதிமொழி ஏற்பு விழா

25th Mar 2022 03:52 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே சாக்கோட்டை மாதா கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கி வரும் செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி மற்றும் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தாளாளரும், நிா்வாக இயக்குநருமான ஐ. மரியசெல்வம் தலைமை வகித்தாா். கும்பகோணம் அரசுத் தலைமை மருத்துவமனை முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணா் ஆா். சுகந்தி, முதுநிலை உதவி அறுவை சிகிச்சை நிபுணா் பி. மகேஷ்வரி, சிறப்பு நிலை செவிலியா்கள் சத்தியபாமா, சலீம் பாட்சா ஆகியோா் பேசினா்.

முன்னதாக, பேராசிரியா் எஸ். இளம்பாரதி வரவேற்றாா். நிறைவாக, செவிலிய பேராசிரியை வி. வித்யாஸ்ரீ நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT