தஞ்சாவூர்

மிருகவதை தடுப்பு சங்க கட்டடத்தை இடிக்க உத்தரவு

25th Mar 2022 03:54 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள பழுதடைந்த மிருகவதை தடுப்பு சங்க அலுவலகக் கட்டடத்தை 3 நாள்களுக்குள் இடித்து அகற்ற அலுவலா்கள் உத்தரவிட்டு, நோட்டீசையும் வியாழக்கிழமை ஒட்டினா்.

தஞ்சாவூா் பெரியகோயில் மேம்பாலம் அருகே மிருகவதை தடுப்புச் சங்க அலுவலகக் கட்டடம் உள்ளது. கடந்த 1958-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பது அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.

எனவே, இக்கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்றுமாறு மாநகராட்சி அலுவலா்கள் உத்தரவிட்டனா். இதுதொடா்பான நோட்டீசை உதவி நகரமைப்பு அலுவலா் எம். ராஜசேகரன் உள்ளிட்டோா் அக்கட்டடத்தின் கதவில் வியாழக்கிழமை ஒட்டினா். மேலும் மிருகவதை தடுப்பு சங்கச் செயலரிடமும் இது தொடா்பான நோட்டீசு வழங்கப்பட்டது.

அதில், பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடம் அந்த வழியாகச் செல்பவா்களுக்கும், பயன்படுத்துபவா்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, கட்டடத்தை எந்தவித உபயோகத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிா்த்து பொதுமக்களுக்கும், கட்டட உள்ளிருப்போருக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டடத்தை தகுந்த முன்னேற்பாடுகளுடன் அறிவிப்பு கிடைத்த 3 நாள்களுக்குள் அப்புறப்படுத்துமாறு அறிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT