தஞ்சாவூர்

ஓய்வு பெற்ற காவலரை தாக்கிரூ. 15 லட்சம் வழிப்பறி

22nd Mar 2022 04:35 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே ஓய்வு பெற்ற காவலரை தாக்கி ரூ. 15 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள பாப்பாபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா். லட்சுமணன் (65). ஓய்வு பெற்ற காவலா்.

இவா் திங்கள்கிழமை காலை தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டிலிருந்து ரூ. 15 லட்சம் ரொக்கத்துடன் இரு சக்கர வாகனத்தில் கறம்பக்குடியில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மருங்குளம் - கறம்பக்குடி சாலையில் கோபால் நகா் அருகே சென்றபோது, பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள் லட்சுமணனை தாக்கினா். நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமணனிடமிருந்த ரூ. 15 லட்சத்தையும், இரு சக்கர வாகனத்தையும் மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

ADVERTISEMENT

இதில், காயமடைந்த லட்சுமணன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT