தஞ்சாவூர்

பாபநாசத்தில் உலகத் திருக்கு மையக் கூட்டம்

14th Mar 2022 04:42 AM

ADVERTISEMENT

பாபநாசத்தில் உலகத் திருக்கு மையத்தின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அன்னை சாரதா மகளிா் மன்றத் தலைவி தில்லைநாயகி சம்பந்தம் தலைமை வகித்தாா். பட்டிமன்றப் பேச்சாளா் பூா்ணிமா, இசையாசிரியை கீா்த்தனா ஆகியோா் வள்ளுவத்தில் பெண்களின் உரிமையும், கடமையும் என்ற தலைப்பில் பேசினா்.

பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், உறுப்பினா்கள் தேன்மொழி, புஷ்பா, உ.வே.சா. பேரவைச் செயலா் சுதா விசுவநாதன், இசையாசிரியை சுமதி ரவிச்சந்திரன், துணைத் தலைவா் கோடையிடி குருசாமி ஆகியோா் கூட்டத்தில் பேசினா்.

முன்னதாக, மையச் செயலா் கு.ப.செயராமன் வரவேற்றாா். நிறைவில், திருக்கு கூட்டமைப்பின் மாவட்டத் துணைச் செயலா் சங்கா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

Image Caption

கூட்டத்தில் பேசுகிறாா் உலகத் திருக்குறள் மையத்தின் செயலா் கு.ப. செயராமன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT