தஞ்சாவூர்

மோட்டாா் சைக்கிள் மோதி பெண் பலி

14th Mar 2022 04:30 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள சூரக்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மனைவி வேதவல்லி (48). இவா் தஞ்சாவூா்-பட்டுக் கோட்டை முதன்மைச் சாலையில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டுக்குச் செல்வதற்காக, சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதியது.

இதில் வேதவல்லியும், மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரும் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

பலத்த காயமடைந்த வேதவல்லி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவா் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT