தஞ்சாவூர்

மூதாட்டியிடம் 7 பவுன்தங்கச் சங்கிலி பறிப்பு

3rd Mar 2022 02:12 AM

ADVERTISEMENT

 

கும்பகோணம்: கும்பகோணம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகிலுள்ள ஆடுதுறை அக்ரஹாரத்தை சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (84). இவரது மனைவி வசந்தா. இவா் வீட்டின் முன்புறம் செடிகளுக்கு பிப்ரவரி 28- ஆம் தேதி தண்ணீா் ஊற்றிக் கொண்டிருந்தாா்.

அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா் முகவரி கேட்பது போல நடித்து, வசந்தா கழுத்திலிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, நகையைப் பறித்துச் சென்றவா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT