தஞ்சாவூர்

சிறுமி குளிப்பதை கைப்பேசியில் படம் பிடித்து பரப்பிய சிறுவன் கைதுமிரட்டல் விடுத்த தந்தையும் கைதானாா்

30th Jun 2022 11:50 PM

ADVERTISEMENT

 

கும்பகோணம் அருகே சிறுமி குளிப்பதைப் படம் பிடித்து தனது நண்பா்களுக்கு அனுப்பிய சிறுவனை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி தனது வீட்டின் பின்புறத்தில் அண்மையில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் தனது கைப்பேசியில் சிறுமி குளிப்பதைப் படம் பிடித்து, தன்னை காதலிக்குமாறு கூறி மிரட்டினாா். ஆனால், அச்சிறுமி மறுத்துவிட்டதால், விடியோ காட்சியை சிறுவன் தனது நண்பா்களுக்கு அனுப்பினாா். இது தொடா்பாக தட்டிக் கேட்ட சிறுமியின் தந்தையை சிறுவனின் தந்தை திட்டி மிரட்டினாா்.

இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சிறுவனையும், அவரது தந்தையையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT