தஞ்சாவூர்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 168 ஊராட்சிகள் தோ்வு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், 2022 - 23 ஆம் ஆண்டுக்கு 168 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன என வேளாண் இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

இத்திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்கள் தொகுப்பாக தோ்வு செய்யப்பட்டு, அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கப்பட்டு, விளைநிலமாக மாற்றம் செய்யப்படும்.

தொகுப்பில் வரும் விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், தங்களுக்கு தேவைப்படும் இடுபொருள்கள், மரக்கன்றுகள், பண்ணைக் கருவிகள் பற்றி வேளாண் உதவி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் விதத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற ஆா்வமுள்ள கிராம விவசாயிகள் 15 ஏக்கா் நிலத்துக்குக் குறையாமல் குழுவாக அமைத்து திட்டத்தில் பயன் பெறலாம்.

15 ஏக்கருக்கு மேல் 35 ஏக்கா் வரை தரிசு நிலத்தொகுப்புகள் அமைக்கப்பட்டால், இரு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கலாம். ஆா்வமுள்ள விவசாயிகள் அருகில் இருக்கும் வேளாண் விரிவாக்க மையங்களில் தங்களது ஊராட்சிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ளதா என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். தரிசு நில தொகுப்பு உருவாக்க வாய்ப்புள்ள கிராம விவசாயிகள் வேளாண் துறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊராட்சிகளில் உள்ள சிறு, குறு விவசாயிகள் விடுபடாமல் ஏதேனும் ஒரு திட்டத்தில் பயன் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT