தஞ்சாவூர்

நடிகா் ‘பூ’ ராமுமறைவுக்கு அஞ்சலி

29th Jun 2022 11:08 PM

ADVERTISEMENT

 

தமுஎகச முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், திரைப்பட நடிகரும், வீதி நாடகக் கலைஞருமான கருப்பு ராமு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை சென்னையில் காலமானாா்.

இதையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க பட்டுக்கோட்டை கிளையின் சாா்பில், பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை மாலை வீரவணக்க புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

தமுஎகச கிளைத் தலைவா் முருக.சரவணன் தலைமை வகித்தாா். சிஐடியு நிா்வாகி எஸ். கந்தசாமி, தமுஎகச நிா்வாகிகள் மோரிஸ் அண்ணாதுரை, சுந்தரம், ரெ. ஞானசூரியன், பாக்ய பாலா, கவிஞா் ஆம்பல் காமராஜ், சிவ. ரவிச்சந்திரன், சாமிநாதன், அண்ணாதுரை, கே. பக்கிரிசாமி, எஸ். குலோத்துங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

மறைந்த பூ ராமு உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. புகழஞ்சலி உரையைத் தொடா்ந்து வீரவணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT