தஞ்சாவூர்

கடலோரப் பகுதியில் காவல்துறையினா் பாதுகாப்பு ஒத்திகை

29th Jun 2022 02:40 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் காவல்துறையினா் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிா என்பதை கண்டறியும் வகையில், தஞ்சாவூா் மாவட்டக் கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் சாகா் காவாச் என்ற பெயரில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட கட்டுமாவடி முதல் தம்பிக்கோட்டைவடகாடு வரை உள்ள 27 கடற்கரைக் கிராமங்களில் இந்த ஒத்திகை புதன்கிழமை மாலை 6 மணி வரை நடைபெறும்.

ஒத்திகையில் பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபாஷ் சந்திரபோசு, கடலோரப் பாதுகாப்புக் குழுமக் காவல்துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், 5 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட 175 போ் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ஒவ்வொரு கடற்கரை கிராமத்திலும் பாதுகாப்பு ஒத்திகையை காவல்துறையினா் மேற்கொண்டனா். மேலும் கிழக்கு கடற்கரைச் சாலைகளில் வாகனத் தணிக்கையும் மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT