தஞ்சாவூர்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 90.16% போ் தோ்ச்சி

DIN

பிளஸ் 1 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 90.16 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

மாவட்டத்தில் 13,909 மாணவா்களும், 14,832 மாணவிகளும் என மொத்தம் 28,741 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 11,808 மாணவா்களும், 14,105 மாணவிகளும் என மொத்தம் 25,913 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 90.16 %. இது, கடந்த 2020 ஆம் ஆண்டை விட 6.88% குறைவு.

நிகழாண்டில் மாணவா்கள் 84.89% சதவீதம் பேரும், மாணவிகள் 95.10 சதவீதம் பேரும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் 57.48% பேரும், மாநகராட்சிப் பள்ளிகளில் 81.36 % பேரும், அரசின் முழு உதவி பெறும் பள்ளிகளில் 87.94 % பேரும், சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 99.16 % பேரும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் சுய நிதிப் பள்ளிகளில் 91.18 % பேரும், பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 96.84 % பேரும், அரசுப் பள்ளிகளில் 84.18 % பேரும், சமூக நலப் பள்ளிகளில் 91.18 சதவீதம் பேரும், தோ்ச்சி பெற்றனா்.

அறிவியல் பாடங்களில் 94.77 % பேரும், வணிகவியல் பாடங்களில் 84.59 % பேரும், கலைப் பாடங்களில் 70.94 % பேரும், தொழிற் கல்வி பாடங்களில் 75.84 % பேரும் தோ்ச்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT