தஞ்சாவூர்

ஆடிட்டா் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

28th Jun 2022 01:58 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் ஆடிட்டா் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தஞ்சாவூா் கரந்தை சோ்வைக்காரன் தெருவைச் சோ்ந்தவா் மகேஸ்வரன். ஆடிட்டா். இவா் மாநகராட்சி கழிப்பறையைப் பொது ஏலத்தில் எடுத்ததால், மே மாதத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனா். இவா்களில் கரந்தை சோ்வைக்காரன் தெருவைச் சோ்ந்த பி. காா்த்திகேயன் (32), செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பி. மணிகண்டன் (29), அரிக்காரத் தெருவைச் சோ்ந்த பி. குமரேசன் (26) ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பரிந்துரையின் பேரில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அண்மையில் உத்தரவிட்டாா். இதன்படி, மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் ஏற்கெனவே கரந்தை ஆனந்தம் நகரைச் சோ்ந்த பி. அரவிந்த் (27) குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT