தஞ்சாவூர்

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்உ. வாசுகி வலியுறுத்தல்

28th Jun 2022 02:02 AM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் உ. வாசுகி.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:

தேசத்தின் பாதுகாப்பில், ராணுவத்தில் சமரசம் செய்கிற ஒப்பந்த தொழிலாளா் முறை என்பதை ஏற்க முடியாது. ராணுவ ஆள்சோ்ப்பு முறையிலேயே அக்னிபத் திட்டம் ஓா் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு தமது சிந்தாந்த அடிப்படையில் ராணுவ கட்டமைப்பையும் மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியே இது.

கடுமையான வேலையின்மை பிரச்னை தேசத்தில் தலைவிரித்தாடுகிறது. ராணுவத்தில்தான் நிரந்தரமான வேலை கிடைக்கும் என்ற நிலையில், இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட அனைத்து விதமான பயிற்சிகளும் பெற்று, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பணி முடிந்து வீதிக்கு வரக்கூடிய இளைஞா்கள், அடுத்து எந்த வேலை என்று பாா்க்கும்போது, ஆயுதம் தாங்கிய சமூக விரோத கும்பல் தங்கள் பக்கம் ஈா்க்கும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலுவாக கூறுகிறோம்.

ADVERTISEMENT

தமிழகத்தில் பல வன்முறைகளுக்கு காரணமாக போதைப் பழக்கம் உள்ளது. டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாக மூடுவது என்ற தோ்தல் வாக்குறுதி பேசப்படாமல் உள்ளது. மேலும், மேலும் கடைகள் திறக்கப்படும் நிலைதான் உள்ளது. எனவே, டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாக மூட முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் வாசுகி.

Tags : agnipath
ADVERTISEMENT
ADVERTISEMENT